நியுசிலாந்து வெற்றி

Sunday, 25 January 2015 - 13:29

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடரை நியுசிலாந்து அணி 4க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஏழு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் ஆறாவது போட்டி இன்று நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 315 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் போது கேன் வில்லியம்ஸன் 97 ஓட்டங்களையும், றொஸ் ரெயிலர் 96 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பதிலளித்து துடுப்பாடிய இலங்கை அணி, 40.3 ஓவர்களில் 195 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

குமார சங்ககார 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

நியுசிலாந்தின் கோரி அண்டர்சன் 4 விக்கட்டுகளை வீழ்த்தியதுடன் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.







Exclusive Clips