இலங்கை வெற்றி

Sunday, 01 March 2015 - 12:50

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
உலக கிண்ணத் தொடரில், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்றிருந்த போட்டியில் இலங்கை அணி 9 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடி இருந்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்தின் ஜோய் றூட் 121 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்து துடுப்பாடிய இலங்கை அணி, 47.2 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 312 ஓட்டங்களைப் பெற்றது.

லஹிரு திரிமன்னே 139 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 117 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆட்டநாயகனாக குமார சங்கக்கார தெரிவானார்.







Exclusive Clips