இலங்கையில் ரகர் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை

Sunday, 19 April 2015 - 13:48

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கையில் ரகர் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக சிறுபராயம் முதல் மாணவர்களுக்கு ரகர் பயிற்சிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“ரகர் காணிவல்” காணிவல் என்ற பெயரில் நேற்று கொழும்பு குதிரை பந்தய திடலில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியாக இளம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ரகர் விளையாட்டின் நுணுக்கங்கள், யுக்திகள் எனபன குறித்து போட்டிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடளாவிய ரீதியாக 80 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் 20 பேர் இலங்கை தேசிய ரகர் அணியின் மேற்பார்வையின் கீழ் தெரிவு செய்யப்பட்டனர்.

தெரிவு செய்யப்பட்ட 20 பேரில் அதிக திறமையினை வெளிப்படுத்தும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள “உலக ரகர் கிண்ண போட்டி 2015” இற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

இறுதி வெற்றியாளர் யார் என்பது குறித்து அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என அனுசரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.







Exclusive Clips