லக்ஷான் சந்தகென்னின் அபார பந்து வீச்சு - காணொளி

Friday, 29 July 2016 - 19:22

%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் இன்றாகும்.

மோசமான வானிலை காரணமாக இன்று போட்டி இடைநிறுத்தப்படும் போது தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலியா அணி 3 விக்கட் இழப்பிற்கு 83 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதனடிப்படையில் , அவுஸ்திரேலியா அணி போட்டியில் வெற்றி பெற 7 விக்கட்டுக்கள் மீதமுள்ள நிலையில் 185 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியா அணி அதன் முதல் இன்னிங்சில் 203 பெற்றுக்கொண்டிருந்தது.

எவ்வாறாயினும் , குசல் மென்டிஸ் பெற்ற 176 ஓட்டங்களுடன் இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சில் 353 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

 இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் மூன்றாவது விக்கட் லக்ஷான் சந்தகென்னின் அபார பந்துவீச்சில் வீழ்த்தப்பட்டது அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அது தொடர்பான காணொளி இதோ....












Exclusive Clips