இலங்கை ஏ அணி 286 ஓட்டங்களால் முன்னிலை...

Friday, 21 October 2016 - 6:59

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8F+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+286+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கும் இலங்கை ஏ அணிக்கும் இடையிலான நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியின் நேற்றைய 3 ஆம் நாள் நிறைவடையும் போது இலங்கை ஏ அணி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 5 விக்கட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியில் முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 318 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 243 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி இலங்கை அணி 286 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பில் அசேல குணரத்ன 69 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips