ரியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சர்ச்சை

Friday, 28 October 2016 - 9:37

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88
ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது, பாரிய அளவில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஊக்கமருந்துகளுக்கு எதிரான உலக அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனை, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் பல ரஷ்ய வீரர்களுக்கு தடை ஏற்பட்டிருந்தது.

எனினும் போட்டிகளில் பங்குபற்றிய பலர், ஊக்கமருந்து சோதனைகளை ஏமாற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

மொத்தமா இந்த முறை ஒலிம்பிக்கில் 11 ஆயிரத்து 470 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அவர்களில் 4 ஆயிரத்து 125 பேர் இந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனையை செய்தமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை.

அத்துடன் அவர்களில் 1 913 பேர், 10 முக்கியமான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100க்கும் அதிகமானவர்களின் மாதிரிகள், அவர்களது முன்னைய மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.







Exclusive Clips