கிரிக்கட்டிலும் சிவப்பு அட்டை?

Thursday, 08 December 2016 - 12:43

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%3F

கால்பந்து, ஹொக்கி விளையாட்டுக்களைப் போன்று, கிரிக்கெட்டிலும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீரர்களுக்கு இனி சிவப்பு அட்டை காட்டும் முறையை நடைமுறைப்படுத்த  எம்.சி.சி. குழு பரிந்துரை செய்துள்ளது.

போட்டியின்போது எதிரணி வீரர் மற்றும் நடுவரை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவோரை, சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றலாம் என ரிக்கி பொண்டிங், ரமீஸ் ராஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரையை, சர்வதேச கிரிக்கெட் சபை ஏற்றுக்கொண்டால், அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் புதிய விதி, நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

சிறிய அளவிலான குற்றத்தில் ஈடுபட்டால், ஓட்டங்களை குறைப்பது போன்ற நடவடிக்கை எடுக்கவும் எம்.சி.சி. குழு கூறியுள்ளது.

மும்பையில் 2 நாட்கள் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எம்.சி.சி. குழுவினர் தெரிவித்துள்ளனர்.








Exclusive Clips