நீண்டகாலம் விளையாடப் போவதில்லை - கோஹ்லி அதிரடி!

Monday, 16 January 2017 - 19:51

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%21
தாம் சச்சின் டெண்டுல்கரை போல நீண்டகாலத்துக்கு விளையாடப் போவதில்லை என்று இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியின் போது கோஹ்லி 122 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன்போது, இரண்டாவதாக துடுப்பாடி 17 சதங்களைப் பெற்று, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமப்படுத்தி இருந்தார்.

அவரது சிறப்பான விளையாட்டுத் திறன் வெளிப்பாட்டினால், சச்சின் டெண்டுல்கரின் ஏனைய பல சாதனைகளையும் முறியடிக்க கூடியதாக இருக்கும் என்று கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

எனினும் இதனை மறுத்துள்ள கோஹ்லி, 24 ஆண்டு கால கிரிக்கட் மற்றும் 200க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகள் போன்ற நீண்டகால கிரிக்கட் வாழ்க்கை தமக்கு அமையாது என்று கூறியுள்ளார்.







Exclusive Clips