இரண்டரை கோடிக்கு ஏலம் போன வீரரின் உருக்கமான கதை!

Wednesday, 22 February 2017 - 10:35

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%21
ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ஐதராபாத்தை சேர்ந்த முதல்தர கிரிக்கெட் வீரர் மொஹமட் சிராஜ் ரூ.2.6 கோடிக்கு (இந்திய ரூபா) விலை போனார்.

அவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் மகிழ்ச்சி ததும்ப கூறியதாவது:-
 
ஏலத்தில் எடுக்கப்பட்டதும் அடுத்த 20 வினாடிகள் எனக்கு பேச்சே வரவில்லை. அதன் பிறகு எனது பெற்றோரை கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். எனக்கு அடித்திருக்கும் இந்த அதிர்ஷ்டத்தை நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதாவது ஒரு அணி என்னை வாங்கும் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு விலைக்கு போவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. எனது வாழ்க்கையில் இது மிகப்பெரிய தருணமாகும். எனது தந்தை மொஹமட் கோஸ், 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நிச்சயமாக இனி அவர் ஆட்டோ ஓட்ட வேண்டிய தேவை இருக்காது. அவர் ஆட்டோ ஓட்டுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளமாட்டேன் என்கிறார். ஆனால் அவரை சமாதானப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். எங்களுக்காக நிறைய தியாகங்களை செய்துள்ள அவருக்கு இனி ஓய்வு தேவை. இப்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இந்த பணத்தை கொண்டு ஐதராபாத்தில் ஒரு நல்ல இடத்தில் எனது குடும்பத்துக்காக வீடு வாங்க விரும்புகிறேன்.
 
இவ்வாறு முகமது சிராஜ் கூறியுள்ளார்.







Exclusive Clips