தமது எதிரியுடன் அணி சேர விரும்பும் ஃபெடரர்...

Tuesday, 28 February 2017 - 15:46

+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D...
லேவர் கிண்ண டென்னிஸ் தொடரின் இரட்டைப் பிரிவில் தமது எதிரியான ரஃபேல் நடாலுடன் அணி சேர தாம் விரும்புவதாக முன்னிலை வீரர் ரொஜர் ஃபெடரர் தெரிவித்துள்ளார்.
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்த தொடர் ஆரம்பமாகிறது.
 
இந்த தொடரில் இரட்டையர் பிரிவில் ராஃபேலுடன் இணைந்து விளையாட கிடைக்குமாக இருந்தால், அதனை பெருமையாக கருதுவதாக ஃபெடரர் கூறியுள்ளார்.
 
கடந்த மாதம் அவுஸ்திரேலிய பகிரங்க தொடரில் நடாலை ஃபெடரர் வீழ்த்தி இருந்தார்.
 
அவருடன் போட்டியிடுவது விசேசமானது என்று கூறியுள்ள ஃபெடரர், அணிசேர்ந்து விளையாடும் எண்ணம் நீண்டகாலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.







Exclusive Clips