பங்களாதேஷ் தொடரில் குசல் பெரேராவுக்கு பதில் மிலிந்த சிறிவர்தன!

Thursday, 23 March 2017 - 21:25

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%21
பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒரு நாள் போட்டிகளுக்காக இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறிவர்தன  இணைத்து கொள்ளப்படவுள்ளார்.

காயம் காரணமாக பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் குஷல் பெரேரா விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாகவே மிலிந்த சிறிவர்த்தன இணைத்து கொள்ளப்படவுள்ளார்.

இரண்டு அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி நாளை மறுதினம் தம்புள்ள மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, காயம் காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 1 க்கு 0 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் வீச்சாளரான ட்ரென்ட் போல்ட் காயம் காரணமாக 2 ஆவது போட்டியில் விளையாடவில்லை.

இதனால் டிம் சவுதி அணியில் இடம்பிடித்தார்.

எனினும், தற்போது பயிற்சியின்போது டிம் சவுத்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் 3 ஆவது டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips