தொடரை கைப்பற்றுமா இலங்கை அணி? அதி முக்கியமான தொடராக மாறிய போட்டி ; I.C.C அறிவிப்பு..

Saturday, 25 March 2017 - 7:23

+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%3F+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%3B+I.C.C+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் இன்று நடைபெறவுள்ளது.

தம்புள்ளை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

தொடரை கைப்பற்றும் அணிக்கு 2019 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு இயல்பாகவே தகுதி பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும் என சர்வதேச கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இடம்பெறும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என பங்களாதேஷ் அணித் தலைவர் Mashrafe Mortaza தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக, தமது நாட்டில் இடம்பெற்ற ஒருநாள் போட்டித் தொடர்களை வென்றது போல, வெளிநாடுகளிலும் அவ்வாறான வெற்றிகளைப் பெறுவதே தமது அணியின் அடுத்த இலக்கு என பங்களாதேஷ் அணித் தலைவர் கூறியுள்ளார்.
 








Exclusive Clips