வரலாற்றில் தடம் பதித்த இன்றைய போட்டி!

Tuesday, 28 March 2017 - 20:58

%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%21+
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

தம்புள்ளையில் நிலவும் கடும் மழை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , இன்றைய போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

கடந்த 2013 ஆம ்ஆண்டு மார்ச் மாதம் 28ம் திகதி பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் பல்லேகெலேயில் இடம்பெற்ற போட்டியொன்றில் இவ்வாறு மழையால் குறுக்கீடு ஏற்பட்டிருந்தது.

அந்த போட்டியில் டக்லஸ் லூவிஸ் முறையில் பங்களாதேஷ் அணிக்கு 3 விக்கட்டுக்களால் வெற்றி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இரு வேறு வருடங்களில் ஒரே தினங்களில் இலங்கை , பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டிகளுக்கு மழையால் தடங்கல் ஏற்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் , நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்றது.
 
இலங்கை அணி சார்பில் குஷல் மெண்டிஸ் 102 ஓட்டங்களை பெற்றார்.
 
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில், டஸ்கின் அஹமட்  4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.










Exclusive Clips