ஆசிய மெய்வல்லுனர் வெற்றி கிண்ண தெரிவு போட்டியில் 3 தேசிய சாதனைகள்..

Sunday, 09 April 2017 - 20:47

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++3+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
22வது ஆசிய மெய்வல்லுனர் வெற்றி கிண்ண போட்டிகளுக்கு, இலங்கை சார்பில் வீரர்களை தெரிவு செய்யும் போட்டிகளில் 3 தேசிய சாதனைகள் நிகழ்தப்பட்டுள்ளன.

தியகமவில் இடம்பெற்ற இந்த போட்டிகளில் கோலூண்றி பாயும் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனீதாக ஜெகதீஸ்வரன் சாதனை படைத்துள்ளார்.

அவர் 3 தசம் 45 மீட்டர் உயரத்தை பாய்ந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதேவேளை பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட போட்டியில் பங்கு பற்றிய கயந்திகா அபேரத்ன, இதற்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

இதற்கமைய அவர் 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்கள் 2.55 வினாடிகளில் ஓடி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.
 
இதனிடையே பரிதிவட்டம் எறிதல் போட்டியில் 47.93 மீட்டர் தூரம் பரிதிவட்டம் எறிந்து ஆர்.கே.ஏ.மதுவன்தி புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கமைய அவர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியாவின் ராஞ்சியில் இடம்பெறவுள்ள, 22வது ஆசிய மெய்வல்லுனர் வெற்றி கிண்ண போட்டிகளில் இலங்கை சார்பில் பங்கு பற்றவுள்ளனர்.







Exclusive Clips