ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்கு இன்று முக்கியமான போட்டி..

Saturday, 29 April 2017 - 13:39

+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81++%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF..
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.

பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ள 34 ஆவது போட்டியில் ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதவுள்ளன.

முன்னணி துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றிபெற்று 5 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7 ஆம் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், இன்று இடம்பெறவுள்ள போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது.

இதேவேளை, இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ள 35 ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.







Exclusive Clips