இந்தியா அணி தொடர்ந்தும் முதலிடத்தில்..

Friday, 19 May 2017 - 18:52

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D..
நேற்று வெளியான சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் வருடாந்தர டெஸ்ட் கிரிக்கட் தரப்படுத்தலில் இந்தியா அணி தொடர்ந்தும் முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது.

அண்மையில் இந்திய அணி நிறைவு செய்த 'போடர்-கவாஸ்கர்' வெற்றி கிண்ண டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினை எதிர்கொண்டு இரண்டிற்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்று மேலும் ஒரு புள்ளியை பெற்று மொத்தம் 123 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில், 91 புள்ளிகளை பெற்றுள்ள இலங்கை 7வது இடத்தில் உள்ளது.

அதேபோல, 117 புள்ளிகளை பெற்ற நிலையில் தென் ஆபிரிக்கா இரண்டாவது இடத்திலும், 100 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் அவுஸ்திரேலியாவும் 99 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து அணி நான்காவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
 







Exclusive Clips