இலங்கை அணி 9 விக்கட்களினால் வெற்றி.. ; காணொளி

Wednesday, 24 May 2017 - 8:10

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF..+%3B+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
வெற்றியாளர்  கிண்ண போட்டியில், இலங்கை அணி மற்றும் ஸ்கோட்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் 9 விக்கட்களினால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணி தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் விளையாடததுடன், உபுல் தரங்க அணியின் தலைவராக செயற்பட்டார்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கோட்லாந்து அணி 43 ஓவர்களும் 2 பந்துகளும் நிறைவில், சகல விக்கட்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

பந்து வீச்சில் சந்தகென் 4 விக்கட்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 22 ஓவர்களும் 5 பந்துக்களும் நிறைவில், ஒரு விக்கட்டை இழந்து 170 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

குசல் மெண்டிஸ் 74 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இதேவேளை, அணியின் தலைவர் உப்புல் தரங்க 53 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி குறித்த காணொளி இணைப்பு...












Exclusive Clips