அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனத்துக்கும், அதன் வீரர்களுக்கும் இடையிலான விரிசல்..

Wednesday, 24 May 2017 - 16:21

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D..
அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனத்துக்கும், அதன் வீரர்களுக்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களுக்கான வேதன உடன்படிக்கை தொடர்பில் நீண்ட நாட்களாக இழுபறி நிலைமை காணப்படுகிறது.

புதிய வேதன வழங்கல் திட்டத்துக்கு கிரிக்கட் வீரர்களின் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

எதிர்வரும் ஜுன் மாதத்துடன் தற்போதுள்ள உடன்படிக்கை நிறைவுக்கு வருகிறது.

அத்துடன் எதிர்காலத்தில் நிதியிடல் தொடர்பில் தலையிட முடியாது என்ற அறிவிப்பையும் அவுஸ்திரேலிய கிரிக்கட் விடுத்திருக்கிறது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் தங்களது அறிவார்ந்த சொத்துரிமைகளை கையாளுவதற்கான பிரத்தியேக நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தின் ஊடாகவே அனைத்து வர்த்தக மற்றும் நிதி சார்ந்த செயற்பாடுகளையும் அவர்கள் இனி முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது அவுஸ்திரேலிய கிரிக்கட்டுக்கும், அதன் வீரர்களுக்கும் இடையில் இருந்த விரிசலை மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









Exclusive Clips