+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
Tuesday, 13 June 2017 - 20:09
க்றிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக வழக்கு பதிவு
2,085

Views
உலகில் அதிக வேதனம் பெறும் விளையாட்டு வீரரான க்றிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக வரி ஏய்ப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஸ்பானிய அதிகாரிகளால் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
 
போர்த்துகல் நாட்டை சேர்ந்த ரொனால்ட்டோ, ரியல் மெட்ரிட் கழகத்திற்காகவும் விளையாடி வருகிறார்.
 
அவர் 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் 16 மில்லியன் டொலர் வரியைச் செலுத்தாமல் ஏமாற்றி இருப்பதாக தெரிவித்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னரும் அவர் மீது வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதும், அதனை அவர் மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
க்றிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஆண்டு வேதனம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 93 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE