இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நிக் போதாஸ்?

Friday, 23 June 2017 - 13:06

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%3F
இலங்கை கிரிக்கட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான நிக் போதாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பயிற்றுவிப்பாளர் கிரஹம் போட் நாடு திரும்பியுள்ளமை இதற்கு காரணமாகும்.

இதன்படி நிக் போதாஸ் எதிர்வரும் சிம்பாப்பே அணிக்கு எதிரான போட்டிகளின் போது இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிக் போதாஸ் பிரபல விக்கட் காப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனுடன் இலங்கை ஏ அணியினது பயிற்றுவிப்பாளரான அவிஸ்க குணவர்தன, தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும், சம்பக்க ராமநாயக்க மீண்டும் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







Exclusive Clips