சமூக வலைத்தளங்களில் ரங்கன ஹேரத் உயிரிழந்தது இப்படிதான்!

Tuesday, 25 July 2017 - 11:24

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் உயிரிழந்து விட்டார் என சமூக வலைத்தளங்களில் வௌியாகியிருந்த தகவல் தொடர்பில் 4 வருடங்களுக்கு பின்னர் வௌிநாட்டு ஊடகமொன்றிற்கு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை , தான் கடினமாக உழைத்ததால் இன்று இந்த இடத்தில் இருப்பதாக ரங்கன ஹேரத் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரங்கன ஹேரத் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியிருந்தது.

இது தொடர்பில் அவர் கூறுகையில்...

அன்று அதிகாலை 3.30 மணியளவில் எனது கைப்பேசிக்கு அழைப்பொன்று வந்தது. எனக்கு அன்பு செலுத்தும் எமது நண்பர்கள் இலங்கையில் இருந்து என்னிடம் கதைத்தனர். அப்போது நான் நினைத்தேன் ஏதோ ஒன்று நடந்துள்ளது என்று. அதில் ஒருவரிடம் நான் கதைத்தேன். அப்போதுதான் என்ன நடந்துள்ளது என எனக்கு தெரியவந்தது. அன்றைய நாள் முழுவதும் எனது கைப்பேசிக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. எனினும், நான் கைப்பேசியை நிறுத்தி வைக்கவில்லை. அதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ள தகவல் உண்மையாக இருக்கக்கூடும் என அவர்கள் நம்பத்தொடங்கினர். எனினும் , என்னால் முடிந்த அளவில் அனைத்து அழைப்புக்களுக்கும் பதில் வழங்கினேன். எனக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என நான் கூறினேன். நான் உயிரோடு உள்ளதாகவும் போட்டியில் விளையாட தயாராக உள்ளதாகவும் கூறினேன். 

நான் எங்கு இருந்தேன் , இப்பொழுது நான் எங்கு இருக்கிறேன் , இது தொடர்பில் நான் பெருமை கொள்கிறேன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடுமையாக உழைத்தேன். எதும் செய்யாவிட்டால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. நாள் ஒவ்வொரு போட்டிகளிலும் மிகவும் விருப்பத்துடனே விளையாடினேன்.
இவ்வாறு ரங்கன ஹேரத் தெரிவித்திருந்தார்.







Exclusive Clips