%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21
Sunday, 13 August 2017 - 16:57
சொற்பட ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி!
167

Shares
20,149

Views
இலங்கை அணிக்கும் சுற்றுலாஇந்தியா அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலே அதிக ஓட்டங்களை பெற்று கொண்டார்.

அவர் 48 ஓட்டங்களை பெற்றார்.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் குல்திப் யாதவ் 4 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்று கொண்டது.

இந்திய அணி சார்பில் சிகர் தவான் 119 ஓட்டங்களையும், ஹரிதிக் பாண்டியா 108 ஓட்டங்களையும், ராஹூல் 85 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சந்தகேன் 132 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ள அதேவேளை, புஸ்பகுமார 82 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இதன்படி, 352 ஓட்டங்கள் பிந்திய நிலையில் இலங்கை அணி பலோவன் முறையில் துடுப்பாடிவருகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE