லசித் மாலிங்கவின் பந்து வீச்சுக்கு சமமான முறையில் பந்து வீசும் நுவன் துஷார அர்ஜுனவை சந்தித்தார்

Wednesday, 16 August 2017 - 18:26

%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+
லசித் மாலிங்கவின் பந்து வீச்சுக்கு சமமான முறையில் பந்து வீசும் வளர்ந்து வரும் வீரரொருவர் தொடர்பில் இத்தினங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

நுவன் துஷார என்ற இந்த வீரர் காலி எல்பிடிய இங்கதலாவ கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில் , கரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தில் தனது கிரிக்கட் பயணத்தை தொடங்கினார்.

சில காலம் கொழும்பு எஸ்.எஸ்.சீ விளையாட்டுக்கழகத்தில் பிரதிநிதித்துவம் செய்த நுவன் துஷார தற்போது மத்திய கொழும்பை கேந்திரமாக கொண்டு தனது பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வளர்ந்து வரும் இந்த வீரர் இன்று கனிய வள அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கவை சந்தித்துள்ளார்.

தனது கிரிக்கட் வாழ்வுக்கு ஆலோசனைகளை பெறும் நோக்கில் அமைச்சரை சந்தித்த நுவன் துஷாரவிற்கு அமைச்சரால் கிரிக்கட் உபகரணங்கள் இதன் போது வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை , கடந்த 2014ம் ஆண்டு அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கட் சபையின் இடைக்கால நிர்வாகக்குழுவின் தலைவராக இருந்த சமயத்தில் லசித் மாலிங்கவின் சிகையலங்காரம் தொடர்பில் விமர்சனங்களை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Exclusive Clips