பந்து தலையை தாக்கி கிரிக்கட் வீரர் உயிரிழப்பு!

Thursday, 17 August 2017 - 10:50

%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D++%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
பாகிஸ்தானின் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானின் கிளப் அணியில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, மர்தானில் ஆகஸ்ட் 14 ஆம் திகதி இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் விளையாடியபோது பவுன்சர் பந்து அவரது தலையில் தாக்கியது.

பேட்டிங் செய்தபோது அவர் ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

ஜூபைர் அகமது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.

ஜுபைர் அகமது குவெட்டா பியர்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இதேவேளை,  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர், பவுன்சர் பந்தை அடிக்கும் போது காயம் அடைந்தார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதற்காக அந்த அணி வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் புறப்படுகிறது.

முன்னதாக, மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இதில் டேவிட் வோர்னர் லெவன் அணியும் ஸ்மித் லெவன் அணியும் மோதிய நடந்தப் போட்டியில் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாஸ்ல்வுட் வீசிய பவுன்சர் பந்தை வார்னர் அடிக்க முயன்றார்.

அது அவரை பலமாக தாக்கியது.

இதில் நிலைதடுமாறி விழுந்தார்.

அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.








Exclusive Clips