இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி

Thursday, 17 August 2017 - 11:34

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF++
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகிறது.
 
பகல் இரவு போட்டியாக இடம்பெறும் இந்த போட்டியில், இளம் சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.
 
இந்த போட்டி இங்கிலாந்தில் இடம்பெறும் முதல் பக இரவு டெஸ்ட் போட்டியாகும்.
 
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஓவல் மற்றும் ட்ராஃபோர்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இருந்து இன்றையதினம் விளையாடும் அணியில் ஒரு மாற்றம் மாத்திரமே ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன்படி கீட்டன் ஜென்னிங்ஸிற்கு பதிலாக மார்க் ஸ்டோன்மென் இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
மேற்கிந்திய தீவுகளைப் பொறுத்தவரையில் இன்று காயில் ஹோப் தமது முதற்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேநேரம் போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற போதும், துடுப்பாட்டத்துக்கும் பாதகமாக அமையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்தில் இறுதியாக 2000ம் ஆண்டே டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 







Exclusive Clips