%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D..
Wednesday, 13 September 2017 - 11:49
விபத்தில் சிக்கிய இந்திய அணியின் பிரபல வீரர்..
16,843

Views

இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, தனது காரின் டயர் வெடித்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இந்திய அணியின் முன்னணி அதிரடி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா.

இடது கை துடுப்பாட்ட வீரரான ஆன இவர் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

தற்போது துலீப் டிராபி தொடர் நடைபெற்ற வருகிறது.

இதில் இந்தியா ப்ளூ அணிக்கு ரெய்னா தலைவராக உள்ளார்.

இன்றைய தினம் இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டி கான்பூரில் நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா ப்ளூ அணியில் இணைய நேற்றைய தினம் அதிகாலை காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு சொகுசு காரான ரேஞ்ச் ரோவரில் சென்று கொண்டிருந்தார்.

கார் எட்டாவா பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, டயர் திடீரென வெடித்தது.

இந்த விபத்தில் ரெய்னா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.

அதிகாலை என்பதால் உடனடியாக உதவி கிடைக்காமல் ரெய்னா நீண்ட நேரம் காத்திருந்தார். அதன்பின், உள்ளூர் காவற்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, மாற்று ஏற்பாடு செய்து ரெய்னாவை அனுப்பி வைத்தனர்.

 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE