%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+%2C+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88..%21+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88
Wednesday, 13 September 2017 - 18:24
தோனி , கோஹ்லி இல்லை..! ரசிகர்கள் கவலை
73

Shares
8,831

Views
ஏழு நாட்டு வீரர்களை உள்ளடக்கிய உலக பதினொருவர் அணியில் தோனி மற்றும் கோஹ்லி இல்லாததற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அச்சம் காரணமாக முன்னணி கிரிக்கட் அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கட் விளையாட மறுத்து வருகின்றன.

தற்போது பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டியை மீண்டும் கொண்டுவர சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான 7 நாட்டு வீரர்களை உள்ளடக்கிய உலக பதினொருவர் அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடிவருகின்றனர்.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் உலக பதினொருவர் அணியை வீழ்த்தியது.

உலக பதினொருவர் அணியில் சிறந்த வீரர்கள் இல்லாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

முக்கியமாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான கோஹ்லி, டோனி இல்லாதது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE