+%E0%AE%AE%E0%AF%87.%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
Wednesday, 13 September 2017 - 20:57
மே.இந்திய தீவுகள் அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
6

Shares
727

Views
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையில் இன்று நடைப்பெற விருந்த ஒற்றை ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

மழை குறுக்கிட்டமையினால் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளது.

இது 2019ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கு நேரடி தகுதி பெறுவதில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேலும் சிக்கலான தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய இந்த போட்டி கைவிடப்பட்ட நிலையில், இங்கிலாந்துடன் இடம்பெறவுள்ள 5 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும்.

அல்லது அந்த தொடரை 4 க்கு 0 என வெற்றி கொள்ளும் பட்சத்திலேயே, மேற்கிந்திய தீவுகள் அணி 2019ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு நேரடி தகுதி பெறும்.

இல்லையேல், ஒரு போட்டியில் கூட தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணி 2019ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு நேரடி தகுதி பெறும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE