%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Sunday, 17 September 2017 - 14:35
நீண்ட நாட்களுக்கு பிறகு மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய கிறிஸ் கெய்ல் (காணொளி)
6,248

Views
மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
 
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
 
இதன்படி, முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 176 ஓட்டங்களை பெற்றது.

இதில் , அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னர் கிறிஸ் கெய்ல் 21 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை விளாசினார்.

4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர ்இந்த ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
 
பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE