உலக அணியில் கலக்கிய திஸர பெரேரா ஐ.சி.சியில் பெற்ற புதிய இடம்

Tuesday, 19 September 2017 - 9:44

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%90.%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+
உலக பதினொருவர் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடருக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் வீரர் பாபர் அசாம் இருபதுக்கு 20 போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதனுடன் உலக பதினொருவர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய இலங்கை அணியின் வீரர் திஸர பெரேரா துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் 16 இடங்கள் முன்னேறி 53 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் 13 இடங்கள் முன்னேறிள்ளார்.

மேலும் இருபதுக்கு 20 போட்டியின் சகலதுறை வீரர்கள் பட்டியலில் 19 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

உலக பதினொருவர் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் உலக பதினொருவர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்ற நிலையில், இந்த போட்டியில் திஸர பெரோ அபாரமாக துடுப்பாடியிருந்தார்.

இவர் அந்த போட்டியில் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை பெற்று கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.










Exclusive Clips