பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

Wednesday, 20 September 2017 - 18:06

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பாகிஸ்தான் அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் , உப தலைவராக லஹிரு திரிமான்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, திமுத் கருணாரட்ன , கௌசால் சில்வா , குசல் மெந்திஸ் , சதீர சமரவிக்ரம , ரொஷேன் சில்வா , நிரோசன் திக்வெல்ல , ரங்கன ஹேரத் , லக்‌ஷான் சந்தகென் , தில்ருவன் பெரேரா , சுரங்க லக்மால் , நுவன் பிரதீப் , விஷ்வ பிரனாந்து மற்றும் லஹிரு கமகே இந்த குழாமில் இடம்பிடித்துள்ளனர்.

மேலதிக வீரர்களாக தனஞ்சய த சில்வா , ஜெப்ரி வென்டர்சே , அகில தனஞ்சய , லஹிரு குமார் மற்றும் தசுன் சானக ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில் , இந்த இரண்டு போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறவுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 28ம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி டுபாயில் இடம்பெறவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 5 ஒருநாள் போட்டிகளையும் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதி இருபதுக்கு இருபது போட்டி பாகிஸ்தானின் லாஹூர் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் , பாகிஸ்தான் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை வழங்கவுள்ள பாதுகாப்பு அறிக்கை குறித்து ஆராய்ந்த பின்னரே இந்த போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips