26 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்றை மாற்றிய நேற்றைய போட்டி (காணொளி)

Friday, 22 September 2017 - 18:27

26+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின் போது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹெட்ரிக் விக்கட் வீழ்த்தி சாதனை படைத்தார். 
 
அவுஸ்திரேலிய வீரர்களான மேத்யூ வெட்,ஹெஷ்டன் ஹாகர், பெட் கமின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்தார். 
 
இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹெட்ரிக் சாதனை படைத்த 3 வது இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
 
இதற்கு முன்பு சேத்தன்சர்மா நியூசிலாந்துக்கு எதிராகவும் (1987, நாக்பூர்), கபில்தேவ் இலங்கைக்கு எதிராகவும் (1991, கொல்கத்தா) ஹெட்ரிக் விக்கட் எடுத்து சாதனை படைத்திருந்தனர்.

இந்நிலையில் , 26 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஹெட்ரிக் சாதனையை குல்தீப் யாதவ் புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து குல்தீப் யாதவ் பேசியுள்ளார்.
 
ஹெட்ரிக் பந்தை எப்படி வீச வேண்டும் என்று தோனியிடம் ஆலோசனை கேட்டேன். அதற்கு அவர், உனக்கு எப்படி வீச வேண்டுமோ அப்படி வீசு என்றார். இது எனக்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளார்.








Exclusive Clips