%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%2C+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Tuesday, 03 October 2017 - 12:20
தேசிய விளையாட்டு போட்டி, கொழும்பு ரோயல் கல்லூரியில்
2

Shares
341

Views
அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி (02) உள்ளது.

தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் 09 மாகாணங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.
 
இந்த விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில்  ஆரம்பித்து வைக்கபட்டது.
 
இதன் போது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், தேசிய கொடியை ஏற்றியும், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் விளையாட்டு கொடியை ஏற்றியும் விளையாட்டு போட்டிகளை ஆரபித்து வைத்தனர்.
 
இந் நிகழ்வில்¸ கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவிதாதனகே¸உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள்,  பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE