%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%21%21
Friday, 13 October 2017 - 10:06
இலங்கை அணியின் மற்றுமொரு பிரபல வீரருக்கு உபாதை!!
73

Shares
8,863

Views
இலங்கை , பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியில் இருந்து இலங்கை அணியின் ​வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் வௌியேற்றப்பட்டுள்ளார்.

கடந்த தினத்தில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரின் பின்னர் அவரின் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் , நுவன் பிரதீப்பின் உபாதை நிலைமை தொடர்பில் கொழும்பில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக , விஷ்வா ஃபெர்ணாண்டோ அணிக்கு இணைத்துக்கொள்ளப்படலாம் என தகவல் வௌியாகியுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானில் அணியின் மொஹமட் அமீர் மற்றும் அசார் அலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதியாக செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடி வென்ற பாகிஸ்தான் அணிக்கு  இன்றைய போட்டியில் களமிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்தநிலையில் அஹமட் செசாட் மற்றும் பஃகார் சமான் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்து வீச்சாளர் ருமன் ராயிஸும் உள்வாங்கப்பட்டுள்ளார்.
 
அதேநேரம் இந்திய அணிக்கு எதிரான தொடர் தோல்வியை அடுத்து இலங்கை அணி விளையாடும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும்.
 
இன்றைய போட்டிக்கான அணியில் திஸர பெரேராவும், அஞ்சலோ மெத்தீஸிற்கு பதிலாக தினேஸ் சந்திமாலும் அணியில் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
போட்டி நடைபெறவுள்ள டுபாய் ஆடுகளம் பெரும்பாலும் மிதவேக மற்றும் சுழற்பந்துவீச்சுக்கே சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தநிலையில் அங்கு 300 ஓட்டங்களைப் பெறுவது என்பது அரிதானவிடயமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சஃப்ராஷ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடி இருப்பதுடன், அவற்றில் 7 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.
 
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில், பாகிஸ்தான் அணி 28 போட்டிகளில் வென்றிருப்பதுடன், இலங்கை அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.






Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE