%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
Friday, 13 October 2017 - 20:25
இலங்கைக்கு பாரிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்
42

Shares
5,068

Views
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட்டில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 292 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துபாயில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 292 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம் 103 ஓட்டங்களை பெற்று கொண்டார்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் சுரங்க லக்கமால் 2 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் இலங்கை அணி பதிலுக்கு துடுப்பாடவுள்ளது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE