பாகிஸ்தான் செல்லுமா இலங்கை அணி..? திசர பெரேராவின் தீர்மானம்!

Sunday, 15 October 2017 - 18:58

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%3F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
பாகிஸ்தான் அணியுடன் பாகிஸ்தான் லாஹுர் நகரில் நடத்த திட்டமிட்டுள்ள மூன்றாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு நாட்டுக்கும் இடையில் நடத்த திட்டமிட்டுள்ள குறித்த போட்டி தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை அணியின் 40 வீரர்கள் கைச்சாத்திட்ட கடிதமொன்று ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

மேலும் ,குறித்த போட்டியினை வேறொரு மைதானத்தில் நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் , வீரர்களின் இந்த கோரிக்கை குறித்து ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் நாளை தனது தீர்மானத்தை வௌியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , குறித்த கடித்ததில் இலங்கை அணியின் சகலதுறை விளையாட்டு வீரர் திசர பெரேரா கைச்சாத்திடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் , கடந்த தினத்தில் பாகிஸ்தானில் இடம்பெற்ற உலக பதினொருவர் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இருபதுக்கு இருபது தொடரில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Exclusive Clips