இன்றைய போட்டியில் சாதனை படைப்பாரா திக்வெல்ல?

Monday, 16 October 2017 - 14:27

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%3F
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல 90 ஓட்டங்களை பெற்றுக்கொள்வாராயின், இலங்கை அணி சார்பில் ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இதற்கு முன்னர் , இலங்கை அணி சார்பில் குறைந்த ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்து  ரோய் டயஸ் சாதனை படைத்திருந்தார்.

இவர் 27 ஒருநாள் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்திருந்தார்.

இந்நிலையில் , 25 போட்டிகளில் விளையாடியுள்ள திக்வெல்ல இதுவரை 910 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

திக்வெல்ல இன்றைய போட்டி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பெற்றுக்கொள்ளும் ஓட்டங்களுக்கு அமைய , 1000 ஓட்டங்களை பெற்றுக்கொள்வாராயின் அவர் ரோய் டயஸின் சாதனையை சமம்படுத்த வாய்ப்பு காணப்படுகிறது.


 







Exclusive Clips