நேற்றைய போட்டியில் எதிர்பாராவிதமாக நடந்த விபரீதம்

Thursday, 19 October 2017 - 8:05

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (18) இடம்பெற்ற போட்டியின் இடையே சாமர கப்புகெதர உபாதைக்கு உள்ளானார்.

இலங்கை களத்தடுப்பில் ஈடுபட்ட போது விக்கட் காப்பாளர் நிரொசன் திக்வெல்ல வீசிய பந்து, எதிர்பாராவிதமாக சமர கப்புகெதரவின் முகத்தில் பட்டது.

இதனால் அவரது முகத்தில் கண்ணுக்கு கீழ் பகுதியில் பாரியளவு வீக்கம் ஏற்பட்டது.

பின்னர் சிகிச்சைக்காக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.

இதேவேளை இலங்கை கிரிக்கட் அணியானது நேற்று தொடர்ந்து 10வது தடவையாகவும் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய 3வது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட தீர்மானித்திருந்தது.

இதன்படி 48.2 ஓவர்களில் 208 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

அணித்தலைவர் உபுல்தரங்க 61 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி 34 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை வீழ்த்திய அதேநேரம், பாகிஸ்தான் சார்பாக குறைந்த போட்டிகளில் 50 விக்கட்டுகளை கடந்த வீரராகவும் பதிவானார்.

சர்வதேச அளவில் குறைந்த போட்டிகளில் 50 விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அவர் நான்காம் இடத்தில் இணைந்துள்ளார்.

209 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 42.3 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

நேற்று தமது முதலாவது போட்டியில் விளையாடிய முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் வீரரும், தற்போதைய தேர்வுக் குழுத் தலைவருமான இன்சமம் உல் ஹக்கின் உறவினரான இமாம் உல் ஹக், 100 ஓட்டங்களைப் பெற்றார்.

தமது முதலாவது போட்டியிலேயே 100 ஓட்டங்களைக் கடந்த 13வது வீரராக அவர் பதிவானார்.

இதன்படி பாகிஸ்தான் அணி 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 3க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.



!!@@iqwii!!@@$#$#$%^$%# by shoaibvideos







Exclusive Clips