யுவராஜ் சிங் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

Thursday, 19 October 2017 - 12:01

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
யுவராஜ் சிங் மீது அவரது சகோதரனின் மனைவி முறைப்பாடு

இந்திய கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் மீது அவரது சகோதரனின் மனைவி முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

யுவராஜ் சிங் இன் சகோதரனின் பெயர் ஜோரோவர் சிங், என்பதோடு அவரின் மனைவியின் பெயர் அகன்ஷா ஷர்மாவாகும்,
யுவராஜ் சிங் இன் சகோதரன் மற்றும் அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்க்கின்றனர்.

அகன்ஷா ஷர்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில், யுவராஜ் சிங் இன் குடும்பம் தன்னை விரைந்து கர்ப்பமாகுமாறு வலியுறுத்தியுதாகவும், யுவராஜ் மற்றும் அவரது தம்பியான ஜோரோவர் ஆகிய இருவர் உள்ளிட்ட அனைவரும் தன்னை உள ரீதியாக பாதிப்படைய செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குருகிராம் காவல் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட மனநல பாதிப்பு குறித்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் யுவராஜ் சிங் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு தகாத வார்த்தைகளில் நிந்தித்து இடுகைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







Exclusive Clips