பலரின் அவதானத்தை திருப்பிய தினேஸ் சந்திமாலின் ஆட்டமிழப்பு

Saturday, 21 October 2017 - 7:45

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாஜாவில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சூழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 43.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமான்னே 62 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் அசன் அலி 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 39 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை பெற்ற வெற்றி இழக்கை கடந்தது.

சொய்ப் மலிக் , பாபர் அசம் ஆகியோர் ஆட்டமிழக்காது தலா 69 ஓட்டங்களை பெற்று கொடுத்தனர்.

இதற்கமைய பாகிஸ்தான் அணி தொடரை 4க்கு பூச்சியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியானது நேற்றைய தோல்வியுடன் தொடர்ந்து 11வது தடவையாகவும் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்றைய போட்டியின் தினேஸ் சந்திமால் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தமை பலரது அவதானத்தை திருப்பியுள்ளது.

பந்தை தடுத்தாடிவிட்டு ஓட்டத்தை பெற முயற்சித்த போது மறுமுனையில் இருந்த லஹிரு திருமன்ன சிறிதூரம் ஓடிய நிலையில் மீண்டும் திரும்பினார்.

பின்னர் தினேஸ் சந்திமாலும் மீண்டும் திரும்பி ஓடினார்.

இதன் போது தடுத்தாடிய பந்தை பிடிக்க முற்பட்ட அஹமட் சேசாட் முதலில் பந்தை தவறவிட்டு மீண்டும் இரண்டாவது முறை பிடித்து விக்ககாப்பாளரை நோக்கி வீசியமை விசேட அம்சமாகும்.

பின்னர் விக்கட்காப்பாளர் தினேஸ் சந்திமாலை ஆட்டமிழக்க செய்தார்.

அந்த காணொளி கீழே...


rn

rn
rn











Exclusive Clips