பாகிஸ்தான் அணிக்கு 104 ஓட்ட வெற்றி இலக்கு நிர்ணயம்

Monday, 23 October 2017 - 17:37

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+104+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஓருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 104 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த போட்டி சார்ஜாவில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 26.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 103 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.

இதில் , சந்திமால் , சமரவிக்ரம மற்றும் திக்வெல்ல ஆகியோர் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளாமல் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அணித்தலைவர் உபுல் தரங்க 8 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்த நிலையில், சிறிவர்தன 6 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக திசர பெரேரா 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

லஹிரு திரிமான்ன 19 ஒட்டங்கள் , சீக்குகே பிரசன்ன 16 ஓட்டங்கள்.

பந்து வீச்சில், தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் உஷ்மான் கான் 5 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணியின் முதல் 5 விக்கட்டுக்களையும் இவர் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் இடம்பெற்ற 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ள இலங்கை அணி பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

எனினும் முற்றாக தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றிப்பெற வேண்டிய நிலையில் உள்ளது.

இலங்கை அணி இறுதியாக விளையாடியுள்ள 11 ஓருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

இந்தநிலையில் இன்றைய போட்டியில் இலங்கை தோல்வியை தழுவுமாயின் மூன்று தொடர்களை முற்றாக இழந்த முதல் சந்தர்ப்பமாகவும், தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் தொடரை இழந்த சந்தர்ப்பமாகவும் பதிவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

104 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.




rn







Exclusive Clips