13 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டி திருகோணமலை

Tuesday, 24 October 2017 - 9:48

13+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சுற்றுப் போட்டிகளை நடத்தி வருகி;றது.

திருகோணமலை மாவட்டத்துக்கான போட்டியில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, மஹாதிவுள்வெவெ (பெரிய விளான்குளம்) மகா வித்தியாலயம், சிங்கள மத்திய மகா வித்தியாலய அணிகள் பங்கு கொள்கின்றன.

இதன் முதலாவது போட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, மஹாதிவுள்வெவெ (பெரிய விளான்குளம்) மகா வித்தியாலயம் என்பனவற்றுக்கு இடையே நேற்று (23) ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹாதிவுள்வௌ அணியினர் முதல் இன்னிங்ஸை துடுப்பாட்டத்டதுடன் ஆரம்பித்தனர்.

39 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றனர்.

புத்திக்க 78 பந்துகளுக்கு 95 ஓட்டங்களையும், மதுர 64 பந்துகளுக்கு 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மதிய போசனத்துக்காக ஆட்டம் நிறுத்தப்பட்ட போது மஹாதிவுள்வெவெ அணியினர் தமது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டனர்.

பந்து வீச்சில் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணிசார்பில் ம.பிரணவன் 52 ஓட்டங்கள் வழங்கி 4 விக்கட்டுக்களையும், நௌ.நாசிப் அகமட் 45 ஓட்டங்கள் வழங்கி 2 விக்கட்டுக்களையும், கா.சந்தனன் 19 ஓட்டங்கள் வழங்கி 2 விக்கட்டுக்களையும் ச.குகப்பிரியன் 16 ஓட்டங்கள் வழங்கி 1 விக்கட்டினையும் வீழ்த்தினர்

மதிய போசன இடைவேளையின் பின்னர் களம் புகுந்த ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 39.2 ஓவர்கள் நிறைவில் 101 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தனர்.

நௌ.நாசி அகமட் 119 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள், ம.பிரணவன் 47 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் புத்திக்க 7 விக்கட்டுக்களை வீழ்த்தினார். 

மழை காரணமாக இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதன் மூலம் மஹாதிவுள்வெவெ அணியினர் முதல் இன்னிங்ஸ் வெற்றியை தமதாக்கி கொண்டனர்.








Exclusive Clips