தினேஸ் சந்திமாலின் சர்ச்சை கருத்து தொடர்பில் சஃப்ராஸ் அஹமட் அதிரடி கருத்து

Friday, 03 November 2017 - 14:07

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
இலங்கை கிரிக்கட் டெஸ்ட் அணித் தலைவர் தினேஸ் சந்திமால் வெளியிட்ட கருத்தொன்றை, பாகிஸ்தான் அணித் தலைவர் சஃப்ராஸ் அஹமட் மறுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மந்திரசக்தியாலேயே வெற்றிப் பெற்றதாக அண்மையில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கூறி இருந்தார்.

ஆனால் இந்த கருத்தை பாகிஸ்தான் அணித் தலைவர் சஃப்ராஸ் அஹமட் முற்றாக நிராகரித்துள்ளார்.

மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே பாகிஸ்தான் அணி இந்த போட்டிகளில் தோல்வி அடைந்தது.

இலங்கை அணி மந்திரசக்தியால் டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றிருந்தால், ஏனைய ஒருநாள் மற்றும் 20க்கு20 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று சஃப்ராஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சஃப்ராஸின் இந்த கருத்தை பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கட் வீரர் மொஹமட் யூசுப் ஆமோதித்துள்ளார்.

'கிரிக்கட்டையும் மந்திரங்களையும் இணைக்க வேண்டாம்' என்று அவர் கோரியுள்ளார்.







Exclusive Clips