%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21
Sunday, 05 November 2017 - 19:22
போராடி தோற்றது இந்தியா!
6,652

Views
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற 2வது டி-20 போட்டியில் போராடி தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது.

முண்ட்ரோ மிக அபாரமாக விளையாடி 108 ஓட்டங்களை பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பதிலுக்கு 197 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான தவான் 1 ஓட்டத்துடனும், ரோஹித் சர்மா 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தோனி ஓரளவிற்கு போராடினர்.

இருப்பினும் இந்திய அணியால் 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 156 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.

இதனால் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முண்ட்ரோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்லும் அணி என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE