இலங்கை இந்திய முதலாவது டெஸ்ட் போட்டிக்கு பாதிப்பு!

Thursday, 16 November 2017 - 15:56

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
சீரற்ற காலநிலை காரணமாக சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போட்டி இடைநிறுத்தப்படும் போது தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிவரும் இந்தியா அணி 3 விக்கட்டுக்களுக்கு 17 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளாமல் சுரங்க லக்மால் வீசிய பந்தில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் சிறப்பாக பந்துவீசிவரும் சுரங்க லக்மால் 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஸ் ராஹுல் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ளாமல் ஆட்டமிழந்த நிலையில் , சிகர் தவான் 8 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் , 6 ஓவர்களை வீசியுள்ள சுரங்க லக்மாலின் 6 ஓவர்களிலும் எந்த ஒரு ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள இந்திய அணிக்கு முடியாமல் போயுள்ளமை சிறப்பம்சமாகும்.







Exclusive Clips