சுரங்க லக்மால் உலக சாதனை (காணொளி)

Friday, 17 November 2017 - 13:29

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழைக்காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போட்டியில் முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி மழைக்காரணமாக ஆட்டம் நிறுத்தப்படும் வரை 5 விக்கட்டுக்களை இழந்து 75 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்தநிலையில் டெஸ்ட் போட்டி ஒன்றில் தாம் வீசிய முதல் 7 ஓவர்களில் எந்தவொரு ஓட்டத்தையும் பெற விடாமல் தொடர்ந்து ஓட்டமற்ற ஓவர்களை வீசிய முதல் வீரராக இலங்கை அணியின் சுரங்க லக்மால் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் முன்னர் 2015ல் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக மேற்கிந்திய தீவுகளின் வீரர் ஜெரோம் டெய்லர் தொடர்ந்து 40 பந்துகளை ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் வீசி இருந்தார்.

அதேநேரம், டெஸ்ட் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் கொடுக்காமல் 3 விக்கட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராகவும் அவர் பதிவாகியுள்ளார்.

முன்னர் 1959ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் ரிச்சி பேனாட், இந்தியாவிற்கு எதிராக டெல்லியில் ஓட்டங்களைக் கொடுக்காமல் 3 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.








Exclusive Clips