நடுவருக்கு தவறை சுட்டிக்காட்டிய திக்வெல்லவிற்கு நேர்ந்த கதி!! (காணொளி)

Wednesday, 22 November 2017 - 12:26

%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%21%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நிரோஷன் திக்வெல்ல எவ்வித தவறையும் மேற்கொள்ளாததால் , அவருக்கும் இந்திய அணி வீரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் தான் தலையிட வில்லை என இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

குறித்த வாக்குவாதம் இடம்பெறும் போது மைதானத்தில் மறுபுறத்தில் சந்திமால் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார்.

நிரோஷன் திக்வெல்ல சவால்களுக்கு விருப்பமானவர் எனவும் , அவர் தவறொன்றை புரிந்துள்ளார் என்று நான் எண்ணவில்லை எனவும் சந்திமால் தெரிவித்துள்ளார்.

நிரோஷன் திக்வெல்ல துடுப்பாடும் போது , துடுப்பாட்ட வீரரின் பின்புறத்தில் மூவர் களத்தடுப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இது சர்வதேச கிரிக்கட் விதிகளுக்கு முறனான விடயம் என  தினேஷ் சந்திமால் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் , குறித்த சந்தர்ப்பத்தில் வீசப்பட்ட பந்தில் திக்வெல்ல ஆறு ஓட்டமொன்றை பெற்றுக்கொண்ட நிலையில் , குறித்த பந்தை முறையற்ற பந்தாக அறிவிக்குமாறு நடுவரை கோரியிருந்தார்.

இந்நிலையில் , திக்வெல்ல மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்கு வாதத்தின் போது , அவ்விடத்திற்கு வந்த இலங்கை அணித்தலைவர் சந்திமால் அமைதியாக இருந்ததை காணக்கூடியதாய் இருந்தது.

இந்தியாவுடன் கல்கத்தாவில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையக்கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் தான் இருந்தாக தினேஸ் சந்திமால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் , நிரோஷன் திக்வெல்லவின் செயற்பாட்டை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மேலும் , பதில் வழங்கிய கோஹ்லி , மற்றைய போட்டிக்கு தயாராகுமாறு குறிப்பிட்டுள்ளார்.













Exclusive Clips