உப்புல் தரங்க தலைவர் பதவியில் இருந்து நீக்கம்?

Thursday, 23 November 2017 - 11:59

%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3F
இந்திய அணியுடன் இடம்பெறுள்ள ஒருநாள் தொடருக்காக இலங்கை அணிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதன்படி முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், லஹிரு திரிமன்ன, நிரொசன் திக்வெல்ல ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அண்மைக்காலமாக தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தி வரும் நிரோசன் திக்வெல்லவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை அணியின் தலைவராக நியமிக்க அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அவர் தலைமை தாங்கிய ஒருநாள் போட்டிகளில் நூற்றுக்கு 50 சதவீதமான போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.

இதன்படி அவர் தலைமை தாங்கிய 98 போட்டிகளில், 47 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

எனினும் கடந்த 11 மாதங்களாக 26 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை அணி 21 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் தொடர் தோல்விகளை தவிர்த்து, 2019 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டியை இலக்கு வைத்து புதிய தலைவர் ஒருவரை நியமிக்க புதிய கிரிக்கட் தெரிவுக் குழு விசேட அவதானம் செலுத்தியுள்ளது.










Exclusive Clips