’புலி’க்கு பிறந்தது பூனையாகுமா??: மிரட்டிய சச்சின் மகன் அர்ஜூன்!

Thursday, 23 November 2017 - 16:03

%E2%80%99%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E2%80%99%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F%3F%3A+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%21
கூச் பிகர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கட் போட்டியில் 5 விக்கட் வீழ்த்தி அசத்தினார் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன்.

கூச் பிகர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கட் தொடர் தற்போது இந்தியாவில ்இடம்பெற்று வருகிறது.

இதில் மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் பங்கேற்றார்.

இதில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி, முதல் இன்னிங்சில் 361 ஓட்டங்கள் எடுத்தது. இதற்கு 506 ஒட்டங்களை அடித்து மும்பை அணி பதிலடி கொடுத்தது.

பின் இரண்டாவது இன்னிங்சில் மத்திய பிரதேச அணி, 411 ஓட்டங்கள் எடுத்தது.

இதில் அசத்திய அர்ஜூன், 5 விக்கட் வீழ்த்தி அசத்தினார்.

தனது தந்தையை போல இல்லாமல், பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல், அர்ஜூன் பவுலிங்கில் அதிக கவனம் செலுத்துவதை சச்சினே பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips