இலங்கை , இந்திய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம்

Friday, 24 November 2017 - 7:14

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%2C+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்றையதினம் நாக்பூரில் ஆரம்பமாகிறது.
 
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடரின் முதல்போட்டி வெற்றித் தோல்வி இன்றி நிறைவடைந்தது.
 
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான இரண்டு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
குறிப்பாக இந்திய அணியில் சிக்கார் தவான் மற்றும் புவனேஸ்வர் குமாரும் சுயவிருப்புடன் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
 
அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர்களான முரளி விஜய் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அவர்களில் முரளிவிஜய் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகின்ற போதும், விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்படுமா? அல்லது இசாந்த் ஷர்மா மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருள் ஒருவருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படுமா? என்பது இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.
 
இந்திய அணி தென்னாப்பிரிக்க தொடரை இலக்குவைத்து வைத்து வேகப்பந்து வீச்சு தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்துகின்ற நிலையில், மித வேகப்பந்து வீசும் சகலதுறை வீரராக விஜய் ஷங்கர் இன்றையப் போட்டியில் இணைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
 
இலங்கை அணி கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த நிலையில், தற்போது மேலதிக விசேட துடுப்பாட்ட வீரர் ஒருவரை உள்வாங்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
 
இதன்படி தசுன் சானக நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 
அத்துடன் லஹிரு கமகே கல்கத்தாவில் சிறப்பாக விளையாடி இராத நிலையில் அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா ஃபெர்ணாண்டோ இணைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
இன்றைய போட்டிக்கான ஆடுகளத்தைப் பொறுத்தவரையில், கல்கத்தாவில் இருந்ததைப் போன்றே வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக அமைக்கப்படும் என்று முன்னதாகவே கூறப்பட்டிருந்தது.
 
ஆனால் ஆடுகளத்தில் காணப்படும் மேலதிக புற்களால் வேகப்பந்து வீச்சுக்கு அத்தகைய சாதகம் ஏற்படாது என்றும் ஆடுகள விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த போட்டிக்கு மழையின் பாதிப்பு இல்லை என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கட் தொடரின் முதலாவது டெஸ்ட்டின் இரண்ட​ைம்நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
 
தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர்  வரை 7 விக்கட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.







Exclusive Clips